-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-

Online Store

Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
Select a Category
For more info on Enterprise plans, kindly contact us OR locate an Enterprise Business Partner

பிரிபெய்ட் GX30

GX30 என்பது உங்கள் கைப்பேசியில் இணையத்தைப் பயன்படுத்துவதற்கான பிரிபெய்ட் சந்தா சேவையாகும். GX30 30 நாட்களுக்குச் செல்லுபடியாகும். இந்தத் திட்டத்தை அனுபவிப்பதற்கு, உங்களின் பிரிபெய்ட் சேவை தொடர்ந்து இயக்கத்தில் இருப்பது அவசியம். GX30 எந்த வகையான பயன்பாட்டிற்குமான எல்லையற்ற இணைய ஒதுக்கீட்டையும் (3Mbps) இலவச 3GB Hotspot-ஐயும் கொண்டது.

நீங்கள் உங்களின் எல்லையற்ற இணைய ஒதுக்கீட்டை உங்கள் கைப்பேசியில் எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். (எ.கா: அகப்பக்கங்கள், சமூக வலைதளங்கள், காணொலி மற்றும் இசை கேட்டல், மின்னஞ்சல் போன்ற இன்னும் பல)

அனைத்து U mobile பிரிபெய்ட் பயனீட்டாளர்களும் இத்திட்டத்தை இயக்கம் செய்யலாம், U Broadband சேவையிலிருக்கும் சந்தாதாரர்கள் மட்டும் இதை செய்யவியலாது.

GX30 இணைய ஒதுக்கீட்டுத் திட்டம் விவேகக் கைப்பேசிக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டது.

இந்த எல்லையற்ற இணைய ஒதுக்கீடு உங்களின் விவேகக் கைப்பேசியில் மட்டுமே பயன்படுத்தக்கூடிய தனிப்பட்ட சேவைத்திட்டமாகும். பிற கருவிகளுடன் இணைய ஒதுக்கீட்டைப் பகிர்ந்துகொள்ள, உங்களுக்குக் கூடுதல் இலவச 3GB நடமாடும் hotspot வேகக் கட்டுபாடு ஏதுமின்றி வழங்கப்படுகிறது. நடமாடும் hotspot-லிருந்து பயன்படுத்தப்படும் இணைய ஒதுக்கீடுகள் இதிலிருந்து கழிக்கப்படும்.

நீங்கள் கட்டுபடுத்தப்பட்ட, 64kbps வரையிலான வேகத்தில் தொடர்ந்து உங்களின் நடமாடும் hotspot-ஐ பயன்படுத்தலாம்.

MyUMobile App
படி 1 - MyUMobile app-ஐ தொடங்குங்கள்
படி 2 - Add-Ons-ஐ தேர்ந்தெடுங்கள்
படி 3 - GX30-ஐ தேர்ந்தெடுங்கள்

UMB
படி 1 - *118*1*1# என அழுத்துங்கள்
படி 2 - GX30 சந்தாத்திட்டத்தை உறுதிபடுத்துங்கள்

SMS
ON GX30 என 28118-க்கு SMS அனுப்புங்கள்

இத்திட்டத்தை வெற்றிகரமாக இயக்கம் செய்ய, உங்களிடம் RM30 மீத இருப்புத்தொகை இருப்பதை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள்.

இந்தச் சேவையை நீங்கள் இயக்கம் செய்யும் நாளிலிருந்து உங்கள் சந்தா காலகட்டம் தொடங்குகிறது, இச்சேவை 30 நாட்கள் முடிவடைகையில் தனியங்கியாகவே புதுப்பிக்கப்படும் (GX30 திட்டத்தைப் புதுப்பிக்க உங்கள் பிரிபெய்ட் திட்டத்தில் குறைந்தபட்ச தொகை இருக்க வேண்டும்)

ஆம். உங்களின் மாதாந்திர காலகட்டம் முடிந்ததும் 2 நாட்கள் மற்றும் 1 நாளுக்கு முன்னர் SMS அனுப்பப்படும், மற்றொரு SMS தானியங்கி புதுப்பிப்பு செய்யப்பட்ட பின்னர் அனுப்பப்படும்.

ஆம். உங்களின் புதுப்பிப்பு நிலை பற்றி அறிவுறுத்தும் SMS அனுப்பப்படும்.